மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் #Dr.Ambedkar birthday
அண்ணல் அம்பேத்கர் 134வது பிறந்தநாளையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில் உள்ள 15 வார்டுகளில் ஒருங் கிணைந்த மனிதநேய அம்பேத்கர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் நெடுங்குன்றம் ஆர்.கே.சூர்யா அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், மேலைக்கோட்டையூர், காயரம்பேடு ஆகிய பகுதியில் உள்ள அம்பேத்கர் முழு உருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி 1000 ஏழை களுக்கு உணவு மற்றும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு, நோட்டு, புத்தகங்கள் வழங்கினார். உடன், மாநில முதன்மை செயலாளர்கள் கார்த்திக் ராஜி, ஊராட்சி மன்ற துணை தலைவர் விஜயலட்சுமி சூர்யா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment