மாபெரும் சமூக சேவையில் நெடுங்குன்றம்.R.K. சூர்யா.,BA., LLB.,


மக்கள் நற்பணியில் நெடுங்குன்றம் R.K. சூர்யா அவர்கள் பிறந்த நாள் விழா!!!...

 










மாபெரும் சமூக சேவையில் நெடுங்குன்றம்.R.K. சூர்யா.,BA., LLB.,IHAF-ஒருங்கிணைந்த மனிதநேய அம்பேத்கர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அவர்களின் 13.02.2025 அன்று தனது 37 வது பிறந்த நாளில் தமிழகம் முழுவதும் மற்றும் சென்னை புறநகர் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ரத்த தானம் வழங்கினார்கள் மற்றும் ஏராளமான சமூக பணியையும் மக்கள் நற்பணிகளையும் IHAF -ன் இளைஞர்கள் முன்னெடுத்து நடத்தினார்கள். ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள், ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.


அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு, நோட்டு புத்தகம் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டது. 

 பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
மற்றும் முதியோர் இல்லங்களில் உணவுகள் வழங்கப்பட்டது. 

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, விளையாட்டு பொருட்கள் மற்றும் நோட்டு பேனாக்கள் வழங்கப்பட்டது மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உணவுகள் வழங்கியும் அவர்களோடு பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
இன்னும் ஏராளமான சமூக சேவைகளும் மற்றும் மக்கள் நற்பணிகளும் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
 ஒருங்கிணைந்த மனிதநேய அம்பேத்கர் கூட்டமைப்பின் தலைவர் நெடுங்குன்றம் R.K. சூர்யா அவர்களின் ஆணைக்கிணங்க அவருடைய பிறந்தநாளில் மக்கள் நற்பணிகள் மற்றும் சமூக சேவைகள் வெகு சிறப்போடு நடைபெற்று இருக்கிறது.

 தன்னைப் பின் தொடரும் அனைத்து இளைஞர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் முன் உதாரணமாக அடித்தட்டு மக்களை எழுச்சி மிக்கவர்களாக மாற்றுவதே ஆகச்சிறந்த கடமை என்று தன்
பிறந்த நாளை மனிதநேயத்தோடு கொண்டாடி இருக்கிறார்.
நெடுங்குன்றம் R.K.சூர்யா.,BA., LLB.,,


          "For joining IHAF, please use the link below."

           IHAF 

Comments

Popular posts from this blog

சென்னைக்குள் நுழைய பாஜக நிர்வாகிக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து!!..

சாதி சான்றிதழ் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!!!...

தமிழ்நாடு டுடே பத்திரிக்கையில் IHAF கட்டுரை!!!...